பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து தேவகவுடா பரபரப்பு பேட்டி

பெங்களூரு, மே 18: ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீது வழக்கு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், ஜேடி(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி. தேவகவுடா கூறினார்.
முதன்முறையாக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மவுனம் கலைத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, பிரஜ்வல் மற்றும் எச்.டி. ரேவண்ணாவுக்கு என்ன ஆனது. நான் எல்லாவற்றையும் கவனித்து வருகிறேன். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து எங்கள் குடும்பத்தினர் சார்பில் கூற வேண்டியதை எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் யாருடைய பெயரையும் சொல்லப் போவதில்லை. ஆனால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தனது 92வது பிறந்தநாளில் ஜே.பி. நகரில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு தொடர்பாக‌ முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி பதில் அளித்துள்ளார். சட்டத்தின் வரம்பிற்குள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பது அரசின் பொறுப்பு என்று குமாரசாமி கூறி உள்ளார்.எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ரேவண்ணா மீது வழக்கு போடப்பட்டுள்ளது ஏன் என்பது மாநில மக்களுக்கு தெரியும். இப்போது ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. மற்றொரு ஜாமீன் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை நான் ஆராயவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் எந்தெந்த பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பெண்கள் அச்சத்தில் உள்ளனரோ, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எச்.டி குமாரசாமி விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல தேவையில்லை.கடந்த பல நாட்களாக எனது பதிலுக்காக ஊடகவியலாளர்களே காத்திருந்தீர்கள். இப்போது நான் அதிகம் பேசமாட்டேன். ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரட்டும். அப்போது உங்கள் அனைவரையும் அழைத்து பேசுகிறேன். இப்போது இதை கடப்போம். செய்திகளை உருவாக்க உங்களுக்கு சுதந்திம் உள்ளது. ஆனால் நான் சொல்ல வேண்டியதை ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு சொல்கிறேன் என்றார்.இந்த வழக்குகளால் உங்கள் குடும்பத்திற்கு அரசியல் பின்னடைவு ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். யார் என்ன செய்தாலும், குமாரசாமி அரசியல் ரீதியாக செயல்படுகிறார். எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது. அதனால் அனைத்தையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்கிறார். மக்களவைத் தேர்தலில் நான் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்தேன். முடிவு வரட்டும், பிறகு பேசுகிறேன், என்றார்.பென் டிரைவ் வழக்கில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் பெயரைக் கூறிய பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவுக்கு 100 கோடி ரூபாய் கொடுப்பதாக, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, “தேவராஜ் கவுடாவின் வார்த்தைகளை நானும் ஊடகங்களில் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இதுபற்றி நான் கருத்து கூறவில்லை, குமாரசாமியே இது குறித்து பேசியுள்ளார். எல்லாவற்றையும் திறமையாக எதிர்கொள்வேன் என்றார்.இந்த வழக்குகளில் சட்டத்தின் வரம்பிற்குள் என்ன நடவடிக்கை தேவையோ அதை எடுப்பது அரசின் பொறுப்பு என்று குமாரசாமி கூறினார் என்று தேவகவுடா கூறினார். இன்று எனது 92வது பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் கோவிலுக்கு சென்று பூஜை செய்வேன். அதன்படி இன்றும் பூஜை செய்துள்ளேன். பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளேன். சிலர் எனது பிறந்த நாளையொட்டி கோவிலில் வழிபாடு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றார்.