பிரஜ்வல் வீடியோவை அம்பலப்படுத்திவர்கள் விரைவில் கைது

ஹாசன், மே 9: பிரஜ்வால் வீடியோவை அம்பலப்படுத்திவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் விரைவில் கைது செய்ய‌ வாய்ப்புள்ளது.
ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் வழக்கில் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், நகராட்சி முன்னாள் உறுப்பினர் புட்ராஜ், நவீன், சேத்தன் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை ஹாசன் 3வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.
ஜேடிஎஸ் தேர்தல் முகவர் பூர்ணச்சந்திர தேஜஸ்வி, பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை வெளியிட்டதாகக் கூறி 4 பேர் மீதும் ஏப்ரல் மாதம் ஹாசனில் உள்ள சைபர் கிரைம் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீனை தள்ளுபடி செய்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது அச்சுறுத்தலை எதிர்கொண்டன‌ர்.
பிரஜ்வலின் ஆபாச வீடியோவை வெளியிட வேண்டிய நேரம் இது என்று வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் நவீன் போஸ்ட் போட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு நவீன் மீது ஜேடிஎஸ் முகவர் புகார் அளித்தார். பென் டிரைவ் வெளியானதில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், முன்னாள் நகராட்சி உறுப்பினர் புட்டராஜ், சேத்தன் ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக ஜேடிஎஸ் குற்றம் சாட்டியது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே நவீன் கவுடா தனது பேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை எஸ்ஐடி தீவிரப்படுத்தியுள்ளது.