பிரதமர் முயற்சிக்கு துணை நிற்போம் – முகமது ஷமி

புது டெல்லி : ஜனவரி . 9 – இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முஹம்மத் ஷமி பிரதமர் நரேந்திர மோதி குறித்து தன் எதிர்ப்பை மாலத்தீவு பிரமுகர்கள் தெரிவித்துள்ளதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உருவாகியுள்ள மாலத்தீவு பிரச்சனை குறித்து அவர் கருத்து தெரிவித்து தான் இந்திய சுற்றுலா துறைக்கு ஆதரவு அளிப்பதாகவும் மாலத்தீவில் உள்ள இந்திய கடலோர அழகுகளை காப்பாற்றவேண்டியது அவசியம் எனவும் வற்புறுத்தியுள்ளார். சமீபத்தில் பிரதமர் லட்சத்தீவுக்கு விஜயம் செய்த பின்னர் மாலத்தீவு அமைச்சர் ஒருவரும் மற்ற சில தலைவர்களும் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பின்னர் இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து முஹம்மத் ஷமி மேலும் கூறுகையில் நாடு எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருப்பினும் நம் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும் காப்பாற்றுவது நம் கடமை.இது அனைவருக்கும் நல்லது. பிரதமர் மோதி நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்ல முயல்வதால் நாமும் அதற்க்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும். இதே போல் பல விளையாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு எதிரான இன பேத கருத்துக்களை கூறியுள்ள மாலத்தீவு பிரமுகர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.