பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

சென்னை,செப். 17-
பிரதமர் நரேந்திர மோடி இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன. பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, “பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களின் சார்பாக , தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.