பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ரோகன் போபண்ணா

புதுடெல்லி, பிப்.3 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், ரோகன் போபண்ணா-மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் அதிக வயதில் ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை 43 வயது இந்திய வீரர் ரோகன போபண்ணா படைத்தார்.
இதையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ரோகன் போபண்ணா வாழ்த்து பெற்றுள்ளார்
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், ‘கிராண்ட்ஸ்லாம்’ வெற்றிக் கோப்பையை காண்பித்தார். அப்போது போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்களை போபண்ணா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.