பிரதமர் மோடி எதிரேபாரத் என்று பெயர் பலகை

புதுடெல்லி, செப் 9-புதுடெல்லியில் இன்று தொடங்கிய ஜி 20 மாநாட்டு அரங்கில் அமர்ந்து இருந்த பிரதமர் நரேந்திர மோடி முன்பு இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு பாரத் மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஜி 20 மாநாட்டு அழைப்பிதழில் ஜனாதிபதி திரௌபதி முர் மு பெயருக்கு கீழே இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று அச்சிடப்பட்டு இருந்தது இது இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மசோதா கொண்டு வரப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜி 20 மாநாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்துள்ள மேஜைக்கு எதிரே இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது