பிரதமர் மோடி வருகை: 12ம் தேதி பெங்களூர் போக்குவரத்தில் மாற்றம்

பெங்களூர் : மார்ச். 9 – வரும் 12 அன்று பிரதமர் நரேந்திரமோதி மாநிலத்திற்கு விஜயம் செய்ய உள்ளதை முன்னிட்டு மைசூர் பெங்களூரு அதிவேக சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி தும்கூரிலிருந்து மண்டியா மார்கமாக மைசூருக்கு செல்லும் வாகனங்கள் தும்கூர் – பெல்லூர் க்ராஸ் – நெலமங்களா – பாண்டவபுரா – ஸ்ரீரங்கபட்டணம் வாயிலாக மைசூரு வீதிக்கு செல்லவேண்டும். வரும் 12 அன்று பிரதமர் மோதி மைசூர் பெங்களூரு அதிவேக சாலையை திறந்து வைக்க வரவுள்ள நிலையில் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மண்டியா உதவி ஆணையர் ஹெச் என் கோபாலக்ரிஷ்னா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் வரும் 12 அன்று இந்த சாலி பகுதிகளில்காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வாகன போக்குவரத்துக்கள் திசை திருப்பிவிடப்பட்டுள்ளன. இதே போல் மைசூருவிலிருந்து மண்டியா மார்கமாக பெங்களூருக்கு வரும் வாகனங்கள் மைசூர் – பன்னூர் – கிருகாவலு – ஹலகூறு – கனகபுரா மார்க்கமாக பெங்களூரு வீதிக்கு வரவேண்டும். அதே போல் மைசூருவிலிருந்து மண்டியா மார்கமாக துமகூருக்கு செல்லும் வாகனங்கள் மைசூர் – ஸ்ரீரங்கபட்டணம் – பாண்டவபுரா – நெலமங்களா – – பெல்லூர் க்ராஸ் – வழியாக துமகூரு சாலைக்கு செல்ல வேண்டும். தவிர துமகூருவிலிருந்து மண்டியா மார்கமாக மைசூருக்கு வரும் வாகனங்கள் தும்கூர் – பெல்லூர் – நாகமங்களா – பாண்டவபுரா – ஸ்ரீரங்கபட்டணம் வாயிலாக மைசூர் வீதியை அடைய வேண்டும். இதே வேளையில் பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்லும் வாகனங்கள் பெங்களூரு – சென்னபட்டனா – ஹலகூறு – மலவல்லி – கிருகாவலு – ஹலகூறு – பன்னூர் மார்கமாக மைசூர் வீதியை அடைய வேண்டும். இதே போல் பெங்களூரிலிருந்து மத்தூர் வாயிலாக மலை மஹாதேஸ்வரா பகுதிக்கு செல்லும் வாகனங்கள் பெங்களூர் – ஹலகூறு – மலவல்லி – கொள்ளேகால் வழியாக மலை மஹாதேஸ்வரா சாலிக்கு செல்ல வேண்டும். பெங்களூர் மைசூர் நெடுஞசாலையின் வாகன நெரிசல்களை தவிர்க்கும் நோக்குடன் இரண்டு பிரிவுகளாக ரூபாய் 8066 கோடிகளில் 117 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 52 கிலோமீட்டர் வெறும் பசுமை பகுதி சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் வளர்ச்சி பெரும் நோக்கத்தில் உருவாக்கப்படும் இந்த சாலையால் பெங்களூரு மற்றும் மைசூருக்கு இடையேயான பயண நேரம் வெறும் 90 நிமிடங்களாக குறைய வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு ஹெச் என் கோபாலக்ரிஷ்னா தெரிவித்தார்.