பிரபல சட்ட நிபுணர் பாலி நாரிமன் காலமானார்

டெல்லி: பிப்ரவரி 21 -பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (95) காலமானார். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை ஃபாலி நாரிமன் பெற்றுள்ளார். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக 19 ஆண்டுகள் ஃபாலி நாரிமன் இருந்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் ஃபாலி நாரிமன். 1972-ம் ஆண்டு ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் ஃபாலி நாரிமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் ஃபாலி நாரிமன் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பாலி நாரிமன். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி பல வருடங்களாக வாதாடியுள்ளார் நாரிமன். சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில் நரிமன் வைத்த வாதங்கள் முக்கியத்துவம் பெற்றன.