
மங்களூர் : நவம்பர். 7 – பிரசித்திபெற்ற கல்லேகா டைகர்ஸ் புலி சங்கத்தின் தலைவர் அக்ஷய் கல்லேகா என்பவரை வழிமறித்து நடு வீதியில் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் புத்தூரில் நேரு நகர் சந்திப்பில் நடந்துள்ளது. புலி குழுவின் தலைவராக ப்ரசித்திபெற்று கலர்ஸ் கன்னட தொலைக்காட்சியிலும் இவர் புலி வேஷக்காரனாக நடித்துள்ள இவரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் புத்தூர் தாலூகாவின் நேரு நகர் சந்திப்பில் இவர் இருந்தபோது அக்ஷையை மூன்று பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள அக்ஷய் எவ்வளவோ முயற்சித்தும் அது இயலவில்லை. புதர்களின் இடையே இவர் ஓடி தப்பிக்க முயற்சித்தும் இவரை விரட்டி பிடித்த கொலையாளிகள் இவரை கொன்றுள்ளனர். மணீஷ் , சேத்து மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் அக்ஷய் கல்லேகாவை கொலை செய்துள்ளனர். இவர்களில் பன்னூருவை சேர்ந்த மணீஷ் மற்றும் சேத்துஆகியோர் போலீசில் சரணடைந்துள்ளார். மற்றொரு கொலையாளி தலைமறைவாயுள்ளான். இரு சக்கர வாகனங்கள் விபத்து விஷயமாக நடந்த தகராறால் வாக்குவாதங்கள் முற்றி அது கொலையில் முடிந்துள்ளது. என தெரிய வந்துள்ளது . பஸ் ஓட்டுநராக சேத்து என்பவனின் கூட்டாளியும் அக்ஷய்க்கும் இடையே இருசக்கர வாகன விபத்து குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பின்னர் வாகன பழுது செலவு விஷயமாக இரண்டு ருபாய் கொடுக்கும் சிறிய விஷயம் விபரீதமாகி இது விஷயமாக சேத்துவின் கூட்டாளிகள் சேர்ந்து கொண்டு அக்ஷையை தாக்கியுள்ளனர். இவர்கள் அக்ஷையை தடுத்து நிறுத்தி அரிவாளால் தாக்கியுள்ளனர். அக்ஷய் இறந்து விழுந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் இரண்டு பேர் போலீசில் சரணடைந்துள்ளார். விபத்து காரணமாகத்தான் இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாகிலும் காரணம் இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலியாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த அக்ஷய் கல்லேகர் புலிகள் குழுக்களின் தலைமை வகித்து வந்திருந்தார். அக்ஷையின் புகழை பொறுக்க முடியாமல் விபத்து காரணம் வைத்து அவரை கொலை செய்தனரா என்ற நோக்கத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர இந்த பகுதியில் புலியாட்டம் ஆடுவதிலும் பல கோஷ்டிகளுக்கிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகிறது. இதுவே பல மோதல்களும் காரணமாகிறது , அக்ஷய் கொலை விவகாரம் குறித்து புத்தூர் போலீஸ் நிலயத்தில் வழக்கு பதிவாகி தீவிர விசாரணை நடந்து வருகிறது.