பிரபல ரவுடி காட்டன்பேட்டைசிவா வெட்டிக் கொலை

பெங்களூரு, மார்ச் 9: மகா சிவராத்திரி தினத்தன்று, பிரபல ரவுடி காட்டன்பேட்டை சிவா ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காட்டன்பேட்டை அஞ்சனப்பா கார்டனில் நடந்துள்ளது.
காட்டன்பேட்டை ரவுடி சிவா என்பவரை மர்மநபர்கள் வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கொலைக்கு பழைய முன்விரோதம் மற்றும் உள்ளூர் கும்பல் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூர் வியாபாரிகளிடம் தனது கட்டுப்பாட்டை கொண்டு வர‌ முயன்ற சிவா, போட்டி கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.
தகவல் அறிந்த காட்டன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரை கொடூரமான முறையில் வெற்றி படுகொலை செய்த போட்டி கும்பல் யார்? இந்த கொலையின் உண்மையான நோக்கம் என்ன கொலையாளிகள் எங்கே தப்பி சென்று உள்ளனர் என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.