பிரபல ரவுடி சகோதரர்கள் கைது

பெங்களூர்: செப்டம்பர். 9 – சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்து 15 நாட்களுக்குள்ளாக ஆயுதங்களால் தாக்கிய பிரபல ரௌடி சகோதரர்களை கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு பகுதியின் பிரபல ரௌடிகளாக திகழ்ந்த சஞ்சு மற்றும் வீறு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் . குல்லு ரிஸ்வான் கூட்டாளிகளான சஞ்சு மற்றும் வீறு இருவரும் பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவர்கள்.
பின்னர் ஒரு வாரத்திற்கு முன்னர் முனீஸ்வரா பிளாக் அருகில் தங்கள் எதிர் கோஷ்டியான மனோஜ் என்பவன் மீது ஆய்தங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட கிரிநகர் போலீசார் தற்போது குற்றவாளி ரௌடி சகோதரர்களை மீண்டும் கைது செய்துள்ளனர்.