பிரபல ரவுடி சைக்கிள் ரவி வெட்டிக் கொலை

ஹாசன், ஜூன் 5:
ஹேமாவதிநகரில் பிரபல ரவுடி சைக்கிள் ரவி இன்று காலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஹேமாவதிநகர் அருகே குடிநீர் எடுப்பதற்காக பைக்கில் சென்ற ரவுடி சைக்கிள் ரவியை (47) என்பவரை மர்மநபர்கள் திடீரென தாக்கி கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட ரவி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.தகவல் அறிந்ததும் உடனடியாக பென்ஷன் மொகல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீச்சரிவாளால் தாக்குதல்:
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள கலெஞ்சா கிராமத்தில் உள்ள கார்யடட்கா நகரில் பாஜக தொண்டர் ஒருவர் வீச்சரிவாளால் தாக்கப்பட்டார். சுராபுரா இடைத்தேர்தலில் பாஜகவின் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் ராஜு கவுடாவின் மகனின் கார் மீது காங்கிரஸ் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.