பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

பெங்களூரு, மே 17: பிரபல ரவுடி ஸ்ரீனிவாஸ் என்கிற மிட்டே என்பவர் தொட்டபள்ளாப்பூர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டார்.
ஹேமந்த் குமார் கவுடாவை கொலை வழக்கில் ரவுடி ஷீட்டர் ஸ்ரீனிவாஸ் என்ற மிட்டேவை காலில் சுட்டு கைது. எல‌ஹங்கா தாலுகாவில் உள்ள ஸ்ரீராமனஹள்ளி அருகே மிட்டே என்ற ரவுடியை கைது செய்ய சென்றபோது போலீஸ் கான்ஸ்டபிள் சந்துருவை அவர் தாக்கினார். போலீசார் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா துப்பாக்கியால் சுட்டு கைது செய்தார்.
ஹேமந்த் குமார் கொலை வழக்கில் மிட்டே 2வது குற்றவாளி. மே 11 அன்று, தொட்டபள்ளாப்பூரில் உள்ள நவோதயா பள்ளி முன் ஹேமந்த் குமார் கவுடா (27) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தொட்டபள்ளாப்பூர் ஊரக போலீஸார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து, அவர்களைக் கைது செய்ய வலை விரித்திருந்த‌னர்.
வழக்கில் முக்கிய குற்றவாளியான நரசிம்மமூர்த்தி மிட்டே ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன பாலதாண்டி, டி.எஸ்.பி ரவிக்குமார், ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.