பிரவீன் கொலை: எஸ்டிபிஐ இயக்கத்தை சேர்ந்த 7 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

மங்களூர் : ஜூலை. 28 – சங்கபரிவார் மற்றும் பி ஜே பி தொண்டர்களின் தீவிர எதிர்ப்புக்கு காரணமாகியுள்ள பி ஜே பி இளம் பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாரு கொலை விவகாரத்தின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் எஸ் டி பி ஐ இயக்கத்தை சேர்ந்த 7 பேரை தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாக போலீசார் அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரணையை துவங்கி இந்த கொலையின் முக்கிய குற்றவாளி உட்பட ஏழு எஸ் டி பி ஐ தொண்டர்களை தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்துள்ள சந்தேகத்தின் பேரில் பெள்ளாரே எஸ் டி பி ஐ தொண்டனின் வீட்டுக்குள் நுழைந்து ஏழு தொண்டர்களை தங்கள் வசம் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தங்கள் ஏழு அப்பாவி தொண்டர்களை போலீசார் தங்கள் வசம் அழைத்து சென்று கொடுமைப்படுத்துவதாக எஸ் டி பி ஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலையின் முக்கிய குற்றவாளி பெள்ளாரே பகுதி வாசியாயிருப்பதுடன் விசாரணையின் போது கொலை செய்தது குறித்து தகவல்கள் அளித்துள்ளான். தற்போதைக்கு போலீசார் குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரவீன் கொலையில் கேரளாவின் தொடர்பு இருப்பது குறித்து போலீஸ் துறை விசாரித்து வருகிறது. இதே வேளையில் கடந்த வாரம் பெள்ளாரேவில் நடந்த கேரளா இளைஞனின் கொலைக்கு பதிலடியாக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்த குற்றவாளிகள் வந்தது கேரளா மாநில பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் என்பது அருகில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வாகனத்தின் முழு எண்ணையும் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் கேரளாவின் பிரிவினைவாதி கட்சிகளின் தொடர்பு இருப்பது குறித்து போலீசார் சந்தேகப்படுவதுடன் இந்த நோக்கில் விசாரணைகள் நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன