பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: ஏப். 1: டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசியதாவது:
இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு 1,000 வருட பழமையான கதையை சொல்ல விரும்புகிறேன். ராமர் உண்மைக்காகப் போராடியபோது அவரிடம் எந்த அதிகாரமோ, வளமோ கிடையாது. ராவணனிடம் எல்லாமும் இருந்தது.