பிரியாணி கடைகளில் சோதனை

பெங்களூர், அக். 11-
வணிக வரித்துறை விஜிலென்ஸ் பிரிவை சார்ந்த அதிகாரிகள் திங்கட்கிழமை ஒஸ்கோட்டாவில் உள்ள பல அசைவ ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.யு. பி. ஐ. கோடு கணக்குகளை அவர்கள் அடிக்கடி மாற்றுவதன் மூலம் ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வருவாயை மறைக்கப்படுவது தெரிய வந்தது. இதனால் வரி ஏய்ப்பு செய்வதாக கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளது. உண்மையில் விற்பனை செய்த தொகைகள் மறைக்கப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர். ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுப் பொருட்களை விற்பனை செய்த விலை பட்டியல், அல்லது விற்பனை பில்கள் வழங்குவதில்லை. மற்றும் சரியான கணக்கு புத்தகங்களை அவர்கள் பராமரிக்கவும் செய்வதில்லை.50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இது குறித்து சோதனைப் பணிகளில் இறங்கினர். விசாரணை நடத்தினர்.ஒரு இடத்தில் 30 யு .பி. ஐ குறியீடுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கண்டறிந்தனர்.
ஹோட்டல் வளாகத்தை தவிர ஒரு சில ஓட்டல் உரிமையாளர்கள் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்படி சோதனைகளில் ஈடுபட்டபோது உரிமையாளர்களில் ஒருவரிடம் இருந்து ஒரு கோடியே 47 லட்ச ரூபாய் ரொக்கம் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அவர் மீது வருமான வரித்துறைக்கு புகார் அளித்தனர்.

பெரும்பாலான ஹோட்டல்கள் பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. இதனால் வரியைப்பு செய்யும் ஹோட்டல்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.