பிரியா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர்

சென்னை , நவ.17-
சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியா, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ.10 லட்சம் நிவாரணத்திற்கான காசோலை, அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.