
பெங்களூர் : மார்ச் . 15 – பல்வேறு இன சமுதாயங்களின் ஒதுக்கீடு கோரிக்கை வற்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் நிரந்தர பின்தங்கிய வகுப்பினரின் ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கையை சமர்பித்திருப்பதுடன் ஒதுக்கீடு வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு ஒதுக்கீடை இந்த அறிக்கை சிபாரிசு செய்துள்ளது .
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இந்த ஒதுக்கீடு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருப்பதால் அரசு சில இனங்களுக்கு ஒதுக்கீடு அறிவிப்பு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. தேர்தலில் பல்வேறு இனம் மற்றும் ஜாதி மீது குறி வைத்துள்ள அரசு பின்தங்கிய வகுப்பினர் ஆணையத்தின் அறிக்கையின்படி ஒதுக்கீடுகள் அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிரந்தர பின்தங்கியோர் ஆணையத்தின் தலைவர் ஜெயப்ரகாஷ் ஹெக்டே கடந்த மார்ச் 7 அன்றே முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பல்வேறு சமுதாயங்களின் ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார். ஒதுக்கீட்டிலிருந்து வஞ்சிக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஒதுக்கீடு சிபாரிசு உட்பட லிங்காயத் பஞ்சமசாலி , ஒக்கலிகர் , குருபா சமுதாயம் உட்பட பல்வேறு சமுதாயங்களின் ஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாகவும் ஆணையம் தன அறிக்கை அளித்திருப்பதுடன் இந்த அறிக்கையில் எந்தெந்த ஜாதிகளுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எந்தெந்த பிரிவினருக்கு துணை பிரிவுகளுக்கு பல்வேறு ஜாதிகளை சேர்க்கவேண்டும் என்பது குறித்தும் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது . குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒதுக்கீடு வசதிகள் மறுக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஒதுக்கீடு வழங்குமாறு அறிக்கையில் சிபாரிசு செய்ய பட்டுள்ளதாக தெரிகிறது .
காடுகொல்லா , ஹட்டிகொல்லா , குருபி , பரியாடா , முகாரி , முவாலி , உட்பட பல்வேறு சிறிய ஜாதிகளுக்கு ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
அறிக்கையின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.
தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாதிரியில் கோவிட் காரணமாக பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்பவர்களுக்கு கல்வி மற்றும் வேலை இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமர்பித்த அறிக்கையை அரசு ஏற்று அறிக்கையை ஆய்வு செய்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து அனைவருடனும் முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.