பிவிஆர் ஐநாக்ஸில் நொறுக்குத் தீனி வருமானம் ரூ.1900 கோடி

மும்பை, மே 22- பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 112 நகரங்களில் 1,748 ஸ்கிரீன்களுடன் 360 திரையரங்குகளை இயக்கி வருகிறது. இந்த திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை விட, நொறுக்குத்தீனி மற்றும் பானங்களின் விலை அதிகம் என்று கூறப்படுவது உண்டு. ஓடிடி தளத்தின் ஒரு மாத சந்தாவை விட, பாப்கார்ன் விலை அதிகம் என்று கிண்டலாகக் கூறுவார்கள்.இந்நிலையில், பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் பெப்சி உள்ளிட்ட பான வணிகத்தின் மூலம் ரூ.1958.4 கோடிவருமானத்தை ஈட்டியுள்ளது. டிக்கெட் கட்டண வருவாய் 19% அதிகரித்துள்ள நிலையில், இதன் விற்பனை 21% அதிகரித்துள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.2,751 கோடியாக இருந்த டிக்கெட் கட்டண வருவாய், 2023-2024-ம் ஆண்டில் ரூ.3,279 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.