பிஸிபேளே பாத்


இதற்கான மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள்
கடலைக்காய் – இரண்டு ஸ்பூன்
தனியா – ஒரு ஸ்பூன்
கச கச – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்
பட்டை – ஒரு அங்குலம்
லவங்கம் – நான்கு
ஏலக்காய் – இரண்டு
காய்ந்த மிளகாய் – பத்து
தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்
மேலே தெரிவித்துள்ள அனைத்தையும் வேறு வேறு எண்ணெய் மாற்றாமல் வறுத்துக்கொள்ளவும். மிளகாயை மட்டும் சற்றே எண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து கொள்ளவும். கால் கிலோ துவரம் பருப்பை கழுவி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு விசில் வரும் வரையில் வேக வைக்கவும். பீன்ஸ் உருளைக்கிழங்கு, பட்டாணி கேரட் , கேப்ஸிகம் , முட்டைகோஸ் போன்ற காய் வகைகளை அறுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு கிலோ அரிசியை கழுவி ஊற வைத்திருக்கவும். எலுமிச்சை அளவிற்கு புளியை நனைத்து வைக்கவும். குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை போட்டு சற்று வறுத்து , பின்னர் ஊற வைத்த அரிசியை போட்டு அதையும் சற்றே வறுத்து ஏற்கெனவே தயார் செய்துள்ள மசாலா பொடி , புளி சாறு சிறிதளவு வெல்லம் , மற்றும் உப்பு போட்டு நன்றாக கலந்த பின்னர் வேக வைக்கவும். அரிசியும் காய்கறிகளும் நன்றாக வெந்த பின்னர் சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். கடைசியில் கடுகு ,கறிவேப்பிலை இஞ்சி, முந்திரி மற்றும் கொத்துமல்லி போட்டு தாளித்து அதை வேகவைத்துள்ள அரிசியுடன் கலந்து விட்டால்.. .. அப்பப்பா இத்தனை சுவையான பிசிபேளேபாத்துக்காக எத்தனை தர்ஷினி ஓட்டல்கள் ஏறி இறங்கியுள்ளோம். . இனி அந்த தொல்லை நமக்கு இல்லை என நீங்களே பெருமைபட்டுக்கொள்ளலாம்