பிஹார் தேர்தலில் எல்ஜேபி அனைத்து தொகுதியிலும் போட்டி

புதுடெல்லி, ஜூன் 10- ​முன்​னாள் மத்​திய அமைச்​சரும் பிஹாரின்​ மறைந்த தலை​வரு​மான ராம் விலாஸ் பஸ்​வான் தொடங்​கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்​ஜேபி). இவர், மத்​தி​யில் எந்த கட்சி தலை​மை​யில் ஆட்சி வந்​தா​லும் கூட்​டணி வைத்து அமைச்​ச​ராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்​வான், தற்​போது பாஜக தலை​மையி​லானக் கூட்​ட​ணி​யில் மத்​திய அமைச்​ச​ராக பதவி வகிக்கிறார். ஆரா​வில் நேற்​று​முன்​தினம் எல்​ஜேபி மாநாடு நடை​பெற்​றது. அப்​போது எல்​ஜேபி தலை​வர் சிராக் பஸ்​வான் பேசுகை​யில், ‘‘நான் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிடு​வேன். 243 தொகு​தி​களி​லும் எல்​ஜேபி வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​வார்​கள். பிஹார் மக்​களுக்​கான தேர்​தலில் தனித்​தொகுதி அல்​லாத பொது தொகு​தி​யில் போட்​டி​யிடு​வேன். பிஹாரை முதல் மாநில​மாக மாற்​றவே இந்த முடிவை எடுக்​கிறேன்’’ என்​றார். பிஹாரில் 5 மக்​களவை எம்​.பி.க்​கள் கொண்ட எல்​ஜேபி​யில் ஹாஜிபூர் தொகுதி எம்​.பி.​யாக சிராக் உள்​ளார். தேர்​தலுக்​காக இவர் மத்​திய உணவு பதப்​படுத்​துதல் துறை அமைச்​சர் பதவி​யில் இருந்து வில​கு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் (என்​டிஏ) சிக்​கலை உரு​வாக்​கும் வாய்ப்​பு​கள் உள்​ளன. ஏனெனில், அவரது கட்​சி​யின் 5 எம்​.பி.க்​கள் ஆதரவு என்​டிஏ.வுக்கு மத்​தி​யில் மட்​டும் தொடர உள்​ளது. இதே​போன்ற ஒருநிலை கடந்த 2000 ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தலிலும் எல்​ஜேபி​யால் ஏற்​பட்​டது. முதல்​வர் நிதிஷ்கு​மாரின் ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு) போட்​டி​யிட்ட 134 தொகு​தி​களி​லும் எல்​ஜேபி வேட்​பாளர்​களை நிறுத்​தி​யது. இதனால், ஜேடியு 43 தொகு​தி​களு​டன் 3-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. பாஜக 2-வது இடமும் எல்​ஜேபி ஒரே ஒரு தொகு​தி​யிலும் வெற்றி பெற்​றன. இந்த ஒரு எம்​எல்​ஏ.​வும் தற்​போது ஜேடி​யு​வில் இணைந்து விட்​டார்.