பி.எம்.டி.சி பஸ் கட்டணம், மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்வு

பெங்களூர் : டிசம்பர். 30 – புத்தாண்டின் தொடக்கத்திலேயே தன்னுடைய பயணியருக்கு அதிர்ச்சி தர நகர போக்குவரத்து நிறுவனம் பி எம் டி சி திட்டமிட்டுள்ளது . எரிபொருள்கள் விலையேற்றத்தை முன் வைத்து மாத பாஸ்கள் , தினசரி பாஸ்கள் மற்றும் டிக்கெட் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது. . பி எம் டி சி தற்போது பொருளாதார நஷ்டத்தில் சிக்கியுள்ள நிலையில் அதிலிருந்து விடுபட இத்தகைய விலையேற்றங்கள் செய்ய நிர்வாகம் முற்பட்டுள்ளது. தவிர மாதாந்திர பாஸ் பெறுபவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் சாமான்ய மற்றும் முதியோர் பாஸ் பெறுபவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த இலவச பாஸ்களை கொண்டு பயணிக்க முடியாது. வாயு வஜ்ரா பஸ்களின் மாதாந்திர பாஸ்கள் ரூபாய் 1. 428 மற்றும் ஜி எஸ் டி 721500 ரூபாய்களிருந்து தற்போதய வஜ்ரா மாதாந்திர பாஸ்களின் விலை 1717. 29 பைசாவென மற்றும் இதற்கான ஜி எஸ் டி 85.71க்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வஜ்ரா , வோல்வோ பஸ்களின் விலைகள் 95ரூபாய் மற்றும் ஜிஎச்டி 5 சதவிகிதம் உட்பட 100 ரூபாயாக இருந்தது. இப்போது இந்த விலைகள் மாற்றம் செய்யப்பட்டு 114.29 மற்றும் 5.21 ஜி எஸ் டி சேர்த்து தினசரி பாஸ்கள் விலை 125 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.