பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை

புவனேஸ்வர், ஜன.6-
ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு (2024) முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்கப்படும் என கூறினார்.