பீகாரில் இடி, மின்னல் தாக்கி 11 பேர் பலி தலா ரூ.4 லட்சம் நிவாரணம்

பாட்னா: செப். 20-
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.