பீகாரில் ஒரே நாளில்நீரில் மூழ்கி 22 பேர் சாவு

பாட்னா, அக்.9-
பீகார் மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அங்குள்ள ஒன்பது மாவட்டங்களில் நீரில் மூழ்கி 22 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநில அரசு இதன்பேரில், அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பீகாரின் 9 மாவட்டங்களை சேர்ந்த 22கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
22 பேரின் இறப்பு சம்பவங்கள் அந்த மாநிலத்தின் மக்களை உலுக்கியுள்ளது.
போஜ்பூர் மாவட்டத்தில் ஐந்து பேர், ஜஹானாபாத் மாவட்டத்தில் நான்கு பேர், பாட்னா, ரோஹ் தாஸ் மாவட்டங்களில்
தலா 3, மாதேபூர், தைமூர், மாவட்டங்களில் தலா 1, என 22 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதன் பேரில் பீகார் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல் நிதிஷ்குமார் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா நான்கு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
நேற்று, டெல்லியில் உஸ்மான்பூர் பகுதியில் உள்ள யமுனா காதர் பகுதியில் இரண்டு சகோதரர்கள் நீரில் மூழ்கி இறந்தார்கள். இவர்கள் இரட்டையர்கள். இவர்களின் வயது 14.
டெல்லியில் உள்ள காம்ரி கிராமத்தில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், உடனடியாக இருவரையும் தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர். ஜே .பி. சி. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் நீரில் மூழ்கி 22க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் மாநில முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.