பீகாரை சேர்ந்த இளைஞர் பெங்களூரில் தற்கொலை

பெங்களூர், அக். 16- பீகாரை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சனிக்கிழமை மாலை பெங்களூர் தெற்கு பகுதியில் டிரக்குக்கு பின் சக்கரத்தின் அடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பெயர் நாவல பண்டிட்.(25) பாரதி லேஅவுட் சுத்த குண்டே பாளையத்தை சேர்ந்தவர். ஒரு வாரத்திற்கு முன்பு இவர் விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இவரை இவரின் நண்பர்கள் பீகாரருக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் சுத்த குண்டு பாலையா போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நாவல பண்டிட் பெங்களூரில் பால் விநியோகம் செய்யும் லாரியில் வேலை செய்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு மன உளைச்சலில் காணப்பட்டிருந்தார் என்று இவரின் நண்பர்கள் தெரிவித்த னர். இவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என்பதால், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.