பீகார் முதல்வர் உணவில் விஷம் கலக்கப்படுவதாக பரபரப்பு புகார்

பாட்னா: நவ. 11 பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உணவில் விஷம் கலக்கப்படுவதாக ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பீகார் மாநிலத்தில் இப்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே ஆர்ஜேடி, ஜேடியூ மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. நிதிஷ்குமார் மாநில அரசியலைத் தாண்டிலும் தேசியளவிலும் ஆக்டிவாக இருக்கிறார். எதிர்க்கட்சிகள் கூட்டணியாக இந்தியாவை உருவாக்குவதிலும் கூட நிதிஷ்குமாருக்கு முக்கிய இடம் இருக்கிறது. இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது சில பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நிதிஷ்குமார்: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் உணவில் சில விஷம் பொருட்கள் கலக்கப்படுவதாகப் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நிதிஷ்குமாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கச் சதி நடப்பதாகவும், இதனால் அவரது உணவில் சிலர் விஷத்தைக் கலைப்பதாகவும் ஜிதன் ராம் தெரிவித்தார். நிதிஷ்குமாரின் சமீபத்திய செயல்பாடுகளும் அவரது உடல்நிலை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது என்றார். தொடர்ந்து பேசிய ஜிதன் ராம், “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் அஞ்சலிக் கூட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அவர் அங்கிருந்த மகாவீர் சௌத்ரியின் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவரது உயிருடன் இருந்த அவரது மகன் அசோக் சௌத்ரி மீது மலர்களை வீசி வாழ்த்துக் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போலவே தெரிகிறது” என்றார்.