
ஹைதராபாத், ஆக. 10- நள்ளிரவில் காதலியின் வீட்டிற்கு ரகசியமாக வந்து மொட்டை மாடியில் பீட்சா சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் பேக்கரி தொழிலாளியான முஹம்மது ஷுஹைப் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள போர்பண்டாவில் நடைபெற்றுள்ளது. ஷுஹைப்பும், அவர் காதலியும் பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருந்தப் போது, காதலியின் தந்தை மொட்டை மாடிக்கு வந்துள்ளார். இதையடுத்து ஹுஹைப் நான்கு மாடி கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்துள்ளார். பலத்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் அங்கு சென்று பார்த்தார். கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரைக் கண்டு உடனடியாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். நான்கு மாடி கட்டிடத்தின் மேலிருந்து குதித்த தரையில் விழுந்து ஷுஹைப் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.ஷுஹைப்பும், இளம் பெண்ணும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஷுஹைப் பேக்கரி தொழிலாளி என்பதால், அவரை பீட்சா கொண்டு வருமாறு காதலி வற்புறுத்தியுள்ளார்.அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஷுஹைப் பீட்சாவை எடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷுஹைப்பின் தந்தை சவுகத் அலி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்,