பீட்ரூட்டில் மருத்துவ குணங்கள்


நம்மிடம் சிலருக்கு சில காய்கள் . பிடிப்பதில்லை சிலருக்கு பாகற்காய் ஆகாதென்றால் வேறு சிலருக்கு கத்தரிக்காய் ,பீட்ரூட் போன்ற காய்கள் உண்ண பிடிக்காது. உடலுக்கு அனை த்து வித போஷாக்கு அம்சங்கள் கிடைக்க அனைத்து வித காய்களையும் உண்ண வேண்டும். ஏனெனில் அனைத்து வித போஷாக்கு அம்சங்கள் மற்றும் விட்டமின்களும் ஒரே வகையான ஆகாரத்தில் இருப்பதில்லை. அதிலும் சில காய்கள் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு பீட்ரூட் . பீட்ரூட்டை உண்பதால் கீழ் காணும் முக்கிய ஆரோக்கிய குணங்களை பெறலாம்.
உடலுக்கு சக்தி கொடுக்கும்: பீட்ரூட்டில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் இதை உண்பதால் உடலுக்கு சக்தி கிடைக்கும். அயர்வு மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் போதும். இவை குறைந்து விடும். அதிக பாலிக் ஆசிட் : பாலிக் ஆசிட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இது உடலில் ஜீவ அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவும். பாலிக் ஆசிட் குறைபாடு உள்ளவர்கள் மாத்திரைகளை விழுங்குவதை விட தினசரி பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடித்தாலே போதும். போஷாக்கு அம்சங்கள் : பீட்ரூட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி , பெட்டைன் கால்சியம் , மெக்னீசியம் ,ரஞ்சக நைசின் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமுள்ளது.
இருதயத்திற்கு நல்லது: பீட்ரூட் அதிக ரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்கும். தவிர பீட்ரூட் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும். பீட்ரூட்டில் உள்ள பெட்டைன் அம்சம் தேகத்தில் உள்ள கொழுப்பு அம்சங்களை குறைக்கும். ரத்த குறைபாடு நீங்கும்: ரத்த குறைபாடு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். பீட்ரூட்டில் பொரியல் அல்லது கூட்டுகள் செய்து அடிக்கடி உண்ணலாம். இப்படி செய்தால் உடலில் ரத்த அணுக்கள் பெருகி அதனால் ரத்த குறைபாடு பிரச்சனைகள் நீங்கும். அதனால் பீட்ரூட் உண்பதற்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயமாக நம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.