பீனியா மேம்பாலத்தில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதி

பெங்களூர் : ஜனவரி. 19 – எடை பரிசோதிக்கும் சோதனைகளால் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டிருந்த நகரிலிருந்து சுமார் 18 மாவட்டங்களுக்கு தொடர்பு அளித்து வந்த தேசிய நெடுஞசாலை 4ன் பீன்யாவில் உள்ள டாக்டர் சிவகுமார் ஸ்வாமிஜி பெயரிலான மேம்பாலத்தில் இன்று காலை 11 மணி முதல் வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்த மேம்பாலம் மூடப்பட்ட நிலையில் தத்தளித்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இந்த மேம்பாலத்தில் இன்னும் கன ரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. முதலில் வெறும் எளிமை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பேரூந்துகள் மற்றும் ஆறு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மோட்டார் சைக்கிள்கள் , கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. என இணை போலீஸ் ஆணையர் எம் எஸ் அனுசேத் தெரிவித்தார். இந்த மேம்பாலத்தில் பயன்படுத்திய தூண்களில் பழுதுகள் இருந்தது. இதனால் தேசிய சாலை போக்குவரத்து துறையினர் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேம்பாலத்தில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தனர். தூண்களின் பலத்தை சோதனைகள் செய்ய பளு சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த காரணத்தால் இந்த மேம்பாலத்தில் கடந்த ஜனவரி 16 அன்று இரவு 10 மணி முதல் 19 காலை 11 மணிவரை அனைத்து வித வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்போது இந்த சோதனைகள் முடிந்த நிலையில் வாகங்களுக்கு மேம்பாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.