பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு

பெங்களூர், மே 14-
மொத்த விற்பனையில் பீன்ஸ் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் இறுதியில் ஒரு கிலோ நூறு ரூபாயாக இருந்தது. திங்களன்று அது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சூப்பர் மார்க்கெட் மற்றும் ஹாப்காப்ஸ் கடைகளில் பீன்ஸ் கிலோ 220 முதல் 240 வரை விற்கப்படுகிறது.. பீன்ஸ் மற்றும் பிற காய்கறிகள் பொதுவாக சிக்கபல்லாபூர், கோலார், மைசூர், மற்றும் மண்டியா ஆகியவைகளின் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தான் வரத்து உள்ளது .
இந்நிலையில் பெங்களூரில் உள்ள விற்பனையாளர்கள் விவசாயிகளிடமிருந்து காய்கறி வரத்து குறைந்த அளவு வருவதன் காரணமாக விலை உயர்வை குற்றம் சாட்டுகின்றனர்.
கல்யாண் நகரில் காய்கறி வியாபாரி வெங்கடேஷ், ஒரு கிலோ பீன்ஸ் 240 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ பீன்ஸ் 60 மற்றும் 80க்கு விற்றோம். கடந்த மாதம் நூறாக இருந்தது. ஆனால் இன்று திங்கட்கிழமை மொத்த விலை 200 ரூபாய்க்கு விற்கின்றனர்.எனவே, நான் 240 க்கு விலை நிர்ணயித் துள்ளேன் . இந்த ஆண்டு பீன்ஸ் வரத்து ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு காய்கறிகளின் தேவை உச்சத்தை அடைகிறது என்றார்.