பீர் பாட்டிலில் குத்திபார் ஊழியர் கொலை

குடகு, ஏப். 22: மதுபோதையில் பார் ஊழியர் ஒருவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குஷால்நகரில் நேற்று இரவு நடந்துள்ளது.
குஷால்நகரின் மையப்பகுதியில் உள்ள பார் மற்றும் ரெஸ்டாரண்டில் ஜனதா காலனியைச் சேர்ந்த ஹர்ஷா, பார் ஊழியர் சந்தோஷ் என்பவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ளார்.
குடிபோதையில் இருந்த ஹர்ஷா, சந்தோஷுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹர்ஷா, பீர் பாட்டிலால் சந்தோஷின் தலை மற்றும் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் உயிரிழந்தார்.புகாரின் பேரில் ஹர்ஷாவை போலீசார் கைது செய்த‌னர். இந்த சம்பவம் குறித்து குஷால்நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.