புடவைகளை திருடிய கும்பல் கைது

பெங்களூர் : ஆகஸ்ட். 23 – லட்சக்கணக்கான விலையுள்ள புடவைகளையே குறியாக கொண்டு திருடி வந்த ஒரு கும்பலை ஹை கிரௌண்ட் போலீசார் கைது செய்துள்ளனர். சுனிதா , மட்டபத்தி ராணி , ரத்னவேலு , பன்னீர் , சிவகுமார் , சிவராம் பிரசாத் , வெங்கடேஷ் மற்றும் பரத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். இவர்களிடமிருந்து பல லட்சங்கள் மதிப்புள்ள பட்டு புடவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கும்பலில் 11 பேர் இருந்துள்ள நிலையில் தற்போதைக்கு ஏழு பேர் கைதாகியுள்ளனர். மற்ற நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கும்பல் ஆந்திர பிரதேசத்திலிருந்து நகருக்கு வந்து புடவைகளை திருடி வந்துள்ளனர். இது குறித்து நகரின் அசோக்நகர் மற்றும் ஹை கிரௌண்ட் போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவாகியிருந்தது. புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் இந்த கும்பலை வலை வீசி தேடி வந்தனர்.