புதிதாக 5,221 பேருக்கு தொற்று

புதுடெல்லி:செப்டம்பர். 12 – இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 5,076 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,221 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 995 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 5,975 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்து 239 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 769 குறைந்துள்ளது. அதாவது 47,176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மேலும் 15 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,165 ஆக உயர்ந்துள்ளது.