புதினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவி மீது புதிய தடை

புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோ மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
புதின் மற்றும் கபேவா ஜோடி ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில் வெளிவந்துள்ளன.
, ரஷியாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் அன்பளிப்பு என்ற வகையில், வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த சூழலில், உக்ரைன் மீது போர் தொடுக்கும் முன்பு, தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் வசமுள்ள பகுதிக்கு புதின் அனுப்பி வைத்துள்ளார் என நம்பப்படுகிறது.அலினாவை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்தன. இந்த சூழலில், புதினின் ரகசிய காதலியான அலினா மற்றும் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலா ஆக்ரெத்னயா ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து புதிய தடைகளை விதித்து உள்ளது.