புதிய டி.ஜி.பி., யார்? 26ல் டில்லியில் முடிவு

சென்னை: ​செப். 16 – புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டில்லியில் நடக்க உள்ளது.தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படுவது வழக்கம்.இந்த பட்டியலில் தன்னையும் சேர்க்க வேண்டும் என, டி.ஜி.பி., பிரமோத்குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை காரணமாக கூறி, பட்டியல் அனுப்பாமல், அரசு காலம் தாழ்த்தி வந்தது.மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் ஜூனியரான வெங்கட்ராமனை பொறுப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக நியமித்து உள்ளது. இப்பட்டியலில், தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், போலீஸ் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.