புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கும் தேவகவுடா

பெங்களூரு, மே 25-
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ள போவதாகவும் பாராளுமன்றம் என்பது நாட்டின் சொத்து. இது யாருடைய தனிப்பட்ட விஷயத்திற்கும் தொடர்பில்லை என முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடா தெரிவித்தார்.
நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட்டது. அது நாட்டுக்கு சொந்தமானது. இது பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்ல. முன்னாள் பிரதமர் என்ற வகையிலும், நாட்டின் குடிமகன் என்ற வகையிலும் நாடாளுமன்ற கட்டிட அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்று அவர் திட்ட ஓட்டமாக தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விவகாரத்தில் அரசியலைக் கொண்டுவர விரும்பவில்லை. நான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தில் நான் அங்கு கடமையைச் செய்துள்ளேன், இன்னும் உறுப்பினராக இருக்கிறேன். அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாக்க நான் உழைத்துள்ளேன். எனவே அரசியலமைப்பு விவகாரத்தில் என்னால் அரசியலை கொண்டு வர முடியாது என முன்னாள் பிரதமர் தெளிவுபடுத்தினார்.