புதிய போர்வெல் தோண்ட ரூ.37.5 கோடி

பெங்களூரு, மார்ச் 13: புதிதாக போர்வெல் தோண்ட பிடபள்யூஎஸ்எஸ்பிக்கு ரூ.37.5 கோடியை பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) வழங்கி உள்ளது.
பெங்களூரு நகரின் அதிகரித்து வரும் காவிரி நீரின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வரும் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB), மேலும் ஆழ்துளை கிணறுகளை தோண்டி, பழுதடைந்தவற்றை சீரமைக்க, ரூ.37.5 கோடியை, பெங்களூரு மாநகராட்சியிடம் இருந்து பெற்றுள்ளது. பிபிஎம்பி பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற பணிகளுக்கு ரூ.32.60 கோடியை கூடுதலாக செலவிட விரும்புகிறது.
பிடபள்யூஎஸ்எஸ்பி மாநகரில் குழாய் இருக்கும் முக்கிய பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை வழங்கி வருகிறது.
ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பிபிஎம்பி புறநகரில் போர்வெல் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. காவிரி நீர் பற்றாக்குறை உள்ள முக்கிய பகுதிகளில் போர்வெல் தோண்ட பிடபள்யூஎஸ்எஸ்பிக்கு ரூ.37.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஹெப்பாள், சர்வக்ஞநகர், புலகேசிநகர், காந்திநகர், கோவிந்தராஜநகர், பிடிஎம் லேஅவுட், பத்மநாபநகர், ஜெயநகர், விஜயநகர், சிக்பேட்டை, பசவனாகுடி, ஆர்.ஆர்.நகர் போன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை நிதி கிடைத்துள்ளது.
110 கிராமங்களில், மொத்தம் ரூ.32.30 கோடியில் பெங்களூரு மாநகராட்சி போர்வெல் தோண்டும். எலஹங்கா, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, ஆர்.ஆர்.நகர் மற்றும் தாசரஹள்ளி ஆகிய மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கி, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டம் முன்னெப்போதும் இல்லாத நிலையில் வறண்டுள்ள நிலையில் போர்வெல் தோண்டுவது தற்காலிக நடவடிக்கை என்றும், இந்த போர்வெல்களில் விரைவில் தண்ணீர் தீர்ந்துவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏரிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அனுப்புவதன் மூலமும்,
திறந்தவெளி கிணறுகளை தோண்டி மழைநீரைப் பயன்படுத்துவதன் மூலமும் நிலத்தடி நீரை நிரப்புவதற்கான பெரிய அளவிலான நடவடிக்கைகளை அவர்கள் பரிந்துரைத்துள்ள‌னர்.