புதிய மாவட்ட செயலாளர்களை அறித்த ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, நவம்பர் 18 – முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. இளைஞரணி இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த கருப்பூர் கே.சீனி என்கிற ராஜகோபால் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி புறநகர் வடக்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் தெற்கு எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி புறநகர் தெற்கு மற்றும் தூத்துக்குடி புறநகர் வடக்கு என மூன்று மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். எஸ்.ஏசாதுரை (தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்), டாக்டர் ம. புவனேஸ்வரன் (தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்), டி.வினோபாஜி, (தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்). இவ்வாறு அவர் கூறியுள்ளார்.