புதிய லோகாயுக்தா நீதிபதியாக பி.எஸ். பாட்டில் நியமனம்

பெங்களூர்:ஜூன். 14 – கர்நாடக லோகாயக்தா தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பீமனகௌடா சங்கனகௌடா பாட்டில் (பி எஸ் பாட்டில் ) அவர்களை நியமித்து மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலோட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி எஸ் பாட்டில் தற்போது துணை லோகாயுக்தாவாக பணியாற்றி வருகிறார். இவரையே லோகாயுக்தா தலைமை நீதிபதியாக நியமிக்க மாநில அரசு செய்திருந்த சிபாரிசை மாநில ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். தவிர லோகாயுக்தா தலைமை நீதிபதியாக பி எஸ் பாட்டில் நாளை பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார். நாளை காலை 9.45 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ளது.