புதிய விசா செயல்முறை – இனி எளிதில் துபாய் செல்லலாம்

அமீரகம்: மார்ச் 7-
ஐக்கிய அமீரகம் நாட்டிற்குப் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல புதிய விசா செயல்முறையை ஐக்கிய அமீரகம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மிக விரைவாக விசா பெற முடியும். ஐக்கிய அமீரகம் தனது நாட்டிற்குப் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல, விசா செயல்முறையை எளிதாக்கியுள்ளது. வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும் விரைவாகவும் மாற்ற Work Bundle என்ற புதிய தளத்தை ஐக்கிய அமீரகம் ஆரம்பித்துள்ளது. இந்த தளம் துபாயில் வேலை தேடும் அனுபவத்தை மிக எளிமையானதாகவும் விரைவானதாகவும் மாற்றும் என்று கூறப்பட்டுள்ளது ஐக்கிய அமீரகம்: நாட்டில் தங்குவதற்கும் மற்றும் வேலைக்குமான அனுமதிகள் இந்த ஒர்க் பண்டில் தளம் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.. இது துபாயில் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பெரியளவில் உதவியாக இருக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார். இதற்கு முன்பு இருந்த முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்கள் பெற 30 நாட்கள் வரை ஆகும்.. மேலும், அதற்கு 16 வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.. ஆனால், இப்போது​​இந்த முறை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் வெறும் ஐந்து நாட்களில் துபாய் விசா பெற முடியும். மேலும், முன்பு 16 ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டி இருந்த நிலையில், இப்போது ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு விசா பெறக் குறைந்தது 7 முறை விசா மையங்களுக்கு வர வேண்டும் என்ற சூழல் இருந்த நிலையில், அது இரண்டு நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஒர்க் பண்டில்: இது குறித்து ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒர்க் பண்டில் என்ற இந்தத் தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும்.. விரைவாகத் துபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மாற்றும். இதன் முதற்கட்டம் “Invest in Dubai” தளம் மூலம் துபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாகச் சேர்க்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய வெளிநாட்டுச் சமூகமாக இந்தியர்கள் உள்ளனர், அந்நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் வரை இந்தியர்கள் தான் இருக்கிறார்கள். கடந்த 2021ஆம் ஆண்டில் தரவுகள்படி ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக 20% இந்தியர்கள் அங்கே அபுதாபியில் வசிக்கும் நிலையில், மீதமுள்ளவர்கள் துபாய் உட்பட 6 வடக்கு எமிரேட்ஸில் உள்ளனர். அங்கு வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் வேலையில் இருந்தாலும், அங்குள்ள இந்தியர்களில் சுமார் 10 சதவீதம் பேர் வேலை செய்யும் இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.