புதுச்சேரி கொடூர குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: மார்ச் 11-
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில்‌ அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.சக கைதி கருணாஸ் சத்தம் போடவே, சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார்.
புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.
நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால், இருவர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்துவர் என்பதால் காலாப்பட்டு சிறைக்கு
நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால், பிரச்னை எழும் என்பதால் தனி சிறை அறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில்‌ அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.சக கைதி கருணாஸ் சத்தம் போடவே, சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார். இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்கள்.