புதுவித சிகிச்சை: 12 மணி நேரத்தில் குணமான கொரோனா நோயாளிகள்

புதுடெல்லி, ஜூன் 10- இங்குள்ள சர் கங்காராம் மருத்துவமனை தெரிவிக்கும் வகையில் கொரோனா பாதிப்புக்களான இரண்டு நோயாளிகளுக்கு முதல் ஏழு நாட்களுக்குள் மோனோ கலோனல் ஆன்டிபாடி என்ற புதிய வகை சிகிச்சையால் வெறும் 12 மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 36 வயதுள்ள சுகாதார ஊழியர் மிக அதிக காய்ச்சல் இருமல் மற்றும் பலவீனத்துடன் அட்மிட் செய்யப்பட்டவருக்கு இந்த புதிய வகை சிகிச்சை அளிக்கப்பட்டது அவர் வெறும் 12 மணி நேரத்தில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதே போல் இரண்டாவது நோயாளி 80 வயதான ரசிதான் என்பவர் சர்க்கரை நோய் , இருமல் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டார். இவருடைய ஆக்சிஜென் நிலைமை 95 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் இவருக்கு தொற்று பாதித்திருப்பது சி டி ஸ்கேனில் உறுதியானது. இவருக்கும் இந்த புதிய வகை சிகிச்சை ஆறாவது நாளில் அளிக்கப்பட்டதில் வெறும் 12 மணி நேரத்தில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த புதிய வகை மருத்துவத்தை சரியான நேரத்தில் செலுத்தினால் கொரோனாவால் தீவிரமாக பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமணையில் அட்மிட் ஆகுவதை தவிர்க்க முடியும் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.