புத்துயிர் பெறும் இந்திரா கேன்டீன் உணவு அளவு ருசி அதிகரிக்கும்

பெங்களூரு, மே 25-
மீண்டும் இந்திரா கேண்டீன் ஏற்படுத்தி புனர்வாழ்வு கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதன் பேரில் கவனம் செலுத்தி உள்ளனர். அளவு, தரம், சுவை ஆகியவைகள் சீராக சப்ளை செய்ய வரும் ஒப்பந்ததாரர்களுக்கு குத்தகை விடுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் மாநகராட்சி பகுதிகளில் முன்பு சித்தராமையா முதல்வராக இருந்த போது ஏழைகளின் பசியை போக்க மலிவு விலையில் உணவு கிடைக்க இந்திரா கேண்டீன் ஏற்படுத்தினார். அவரின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவியில் இருந்து இறங்கி, பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் படிப் படியாக மூடி விட்டனர்.
இதனால் மூடப்பட்ட இந்திரா கேன்டீனுக்கு மறு வாழ்வு கிடைக்கும் வகையில் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது மீண்டும் சித்ராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் அமைந்துள்ளது. ஏழைகள் நலனுக்காக மலிவு விலையில் உணவு கிடைக்க உருவாக்கப்பட்ட இந்திரா கேண்டீனை மீண்டும் திறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருநகர் பெங்களூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த இந்திரா காந்தியின் பொறுப்பை மாநகராட்சி ஏற்று நடத்தி வந்தது.மீண்டும் காங்கிரசின்புதிய அரசு ஏற்பட்டு இருப்பதால், மீண்டும் இந்திரா கேண்டீன் ஏற்படுத்த புதியதாக குத்தகைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.இதற்கான புதிய திட்டங்களையும் வகுக்கப்படும் இதுகுறித்து மாநகராட்சியின் நிதித்துறை கமிஷனர் ஜெயராம் கூறுகையில், பெருநகர் பெங்களூர் மாநகராட்சியில் சார்பில் நடத்தி வந்தஇந்திரா கேண்டீன் மலிவு விலை ணவகம் அரசு நிதி உதவியுடன் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதனால், உணவு விநியோக ம் செய்வதில் ‘மெனு’ புதியதாகவே ஏற்படுத்தப்படும் . இதன் டெண்டரில் மிகக் குறைவாக யார் கோரியுள்ளார்களோ அவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.
தற்போது சிற்றுண்டி விலை ஐந்து ரூபாய்க்கும் மதிய உணவு பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. சிற்றுண்டி அளவு மிகவும் குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அதன் அளவையும், தரம், சுவை, அதிகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இரவு நேர உணவு பெரும்பாலும் யாரும் சாப்பிடுவது இல்லை. எனவே காலையும் மதியமும் இந்திரா கேண்டின் உணவு தரமாக சுவையாக வழங்குவதற்கு தக்க ஏற்பாடுகளை கவனிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, பெங்களூர் மாநகராட்சி தலைமை ஆணையர் கூறுகையில், மாநகராட்சி நடத்தி வரும் இந்திரா கேண்டீனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அரசிடமிருந்து எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை.
பலமுறை இதற்காக நிதி வழங்க அணுகினோம். ஆனால் அதற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இதனால் இந்திரா கேண்டின் மூடும் கட்டத்திற்கு சென்றது. மாநகராட்சி பகுதிகளில் 243 இந்திரா கேண்டின் இயங்கியது. மீண்டும் அரசு நிதி உதவி வழங்க கோருவோம். அப்படி கிடைக்கும் பட்சத்தில் இந்திரா கேண்டீனை செய்யப்படும்