புயல் எதிரொலி – கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூர் : மே 27 – வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ரெமல் என்ற பெயர் கொண்ட புயல் நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களில் கன மழைகள் பெய்து வருவதுடன். மேற்கு வங்காளம் அஸ்ஸாம் , கேரளா ஆந்திர பிரதேசம் , மற்றும் கர்நாடகா உட்பட பல மாநிலங்களுக்கு மே 28 வரை அதிக கண மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ரெமல் புயல் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியின் மொங்களா மற்றும் கேப்புப்பாரா கடலோரம் வாயிலாக நேற்று இரவு 8.30 மணியளவில் மணிக்கு 135 கி மீ வேகத்தில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கடலோரத்தை கடந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் இந்த புயலில் சிக்கி ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளான் . இந்த புயல் தாக்கத்தால் வங்காளத்தின் பல பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்ததில் வீடுகள் நாசமடைந்துள்ளன. போலிஸாரின் தகவலின்படி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்றுகொண்டிருந்த படகு ஒன்று புயலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளது. ரெமல் புயல் விளைவால் அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருவதுடன். இம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் விளைவால் அடுத்த 24 மணிநேரத்திற்கு கங்கா நதி மேற்கு பகுதி , மேற்கு வங்காளம் , கோவா , தமிழ்நாடு ஆந்திரப்பிரதேசம் சத்தீஸ்கர் , தெற்கு பாங்களா , ஒரிசாவின் வடக்கு கடலோரம் , மற்றும் திரிபுராவின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். க்ரநாடகா கேரளா லக்ஷதீப் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் , ஆகிய இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.