புயல்: 8 பேர் பலி 20 பேர் மீட்பு

சென்னை : டிசம்பர். 5 – மாநில தட்ப வெட்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் மழை நீடிக்க உள்ளது. இதே வேளையில் தமிழக முதல்வர் மு கா ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கியுள்ளார். இதே நேரத்தில் சென்னையின் கூடுவாஞ்சேரி , மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது . தவிர மழையின் தீவிரத்தால் சென்னையின் ஏரிகளின் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கூவம் நதி பொங்கி வழிந்து வீதியில் வெள்ளக்காடாகியுள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மேற்கு தாம்பரம் மற்றும் சசிவரதன் நகர் பகுதி மக்கள் தங்கள் போக்குவரத்திற்கு படகை பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே வேளையில் போலீசார் 20க்கும் மேற்பட்டவர்களை வெள்ள பகுதியிலிருந்து காப்பாற்றியுள்ளனர். சென்னையில் முதல் முறையாக நேற்று 50 செ மீ மழை பெய்துள்ளது என தி மு க எம் பி ஷண்முகம் தெரிவித்துள்ளார். தவிர இன்று மாலை முதல்வர் மு க ஸ்டாலின் வெல்ல நிலைமை குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகள் நடத்த உள்ளார்.