புரட்சிகர இலக்கியவாதி டாக்டர் சித்தலிங்கய்யா மறைவு

பெங்களூரு: ஜூன் 11 – கன்னட புரட்சி கவிஞர் என்றே புகழ் பெற்று பிரபலமான நாடோஜா டாக்டர் சித்தலிங்கையா இன்று காலமானார். கொரோனா தொற்றுக்கு பாதிப்பான பின்னர் நகரின் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். தலித் மக்களின் கவிஞர் என்றே புகழ் பெற்றிருந்த சித்தலிங்கையா தலித்மக்களுக்காக போராட்டம் மற்றும் சமுதாய சமத்துவம் குறித்து பல இலக்கியங்களை படைத்துள்ளார் . இரணடு முறை மாநில மேலவை உறுப்பினராகவும் சேவை புரிந்துள்ளார்.பெங்களூரு கிராமத்தார மாவட்டத்தின் மாகடியில் உள்ள மஞ்சினபெலே கிராமத்தில் 1954 ல் பிறந்தார். அம்பேத்கர் பெரியார் , வசுதேவ பூபால ,போன்றவர்களின் போராட்டத்தால் தானும் கவரப்பட்டு இது குறித்து பல எண்ணற்ற கவிதைகள் இலக்கியங்கள் படைத்து ராஜ்யோஸ்தவ , பம்பா என பல விருதுகளை பெற்றுள்ளார். கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்த அவர் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் புத்தக பிரிவு தலைவராகவும் சேவை புரிந்துள்ளார். ஊருகேறி என்ற இரண்டு தொகுப்புகளில் தன சுய சரிதையை அவர் எழுதியிருப்பதுடன் சில கன்னட திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.