புரட்டாசி சனிக்கிழமையில் அலைமோதிய கூட்டம்

திருப்பதியில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டா சி 2-வது சனிக்கிழமையை யொட்டிபக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்சில்
அனை த்து அறை களும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
இதனால் வை குந்தம் க்யூ கா ம்ப்ளக்சில் இருந்து ரிங் ரோடு, நாராயணகிரி ஷெட்,
சீலா தோ ரணம் தா ண்டி 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காகவரிசை யில் கா த்துநின்றனர்.
இதேபோல் பிரசாத லட்டு கவுண்டர்களிலும் லட்டு
வாங்குவதற்கா க பக்தர்கள் பலமணி நேரம்
காத்திருக்கின்றனர்.
திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவா சம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில்நிலையம் அருகே உள்ள விஷ்ணு நிவாஸ் ஆகிய கவுண்டர்களில் இலவச தரிசனநேர ஒதுக்கீடு
டோக்கன் வழங்கப்படுகிறது. இதனை பெற பக்தர்கள் கூட்டம்அலை மோதி வருகிறது.
ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லை ன் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 3 மணி முதல் 4மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.
நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணிநேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமா ர் 40 முதல் 45 மணி நேரம்
காத்திருந்தனர்.
திருமலை யில் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தங்குவதற்கு அறைகள் உள்ளன.
அதற்கு மேலும் உள்ள பக்தர்கள் திருமலை க்கு வந்து அறைகள் கிடை க்காமல்அவதி அடை வதை தவிர்க்க வேண்டும்.
கீழ்திருப்பதியில் தங்கி இருந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு
வந்து தரிசனம் செ ய்யலா ம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் நடை பா தை யில் செ ல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்துகாணப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 66, 233 பேர் தரிசனம் செய்தனர். 36,486 பக்தர்கள் முடி
காணிக்கை செலுத்தினர். ரூ.4.71 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.