புலி சிறுத்தை மான் தோல் பறிமுதல் – தர்கா பொறுப்பாளரை கைது செய்ய நடவடிக்கை

சிக்கமகளூரு : அக்டோபர் . 28 – புலி , சிறுத்தை மற்றும் மான் ஆகியவற்றின் தோல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய இமாம் தத்தாத்ரேயா பூதான் பாபா பூதான் தர்காவின் பொறுப்பாளர் சையத் கௌத் மோஹதீனுக்கு எதிராக வன விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் 1972ன் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள் இவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இவருடைய வீட்டில் புலி சருமத்தை வைத்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வன துறை அதிகாரிகள் நேற்று நகரின் மஹாத்மா காந்தி வீதியில் உள்ள இவருடைய வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனைகளின்போது புலி , சிறுத்தை மற்றும் மான் சருமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை கைப்பற்றியுள்ள வனத்துறை அதிகாரிகள் புலி சருமம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தவிர இந்த தர்காவின் பொறுப்பாளர் சையத் கௌத் மொஹிதீன் நேற்று முதல் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாயுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூர் துணை பிரிவு வன அலுவலகத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மாநில காங்கிரஸ் அரசு வெறும் ஹிந்துக்களை மட்டுமே குறியாக கொண்டு செயல்பட்டுவருவதாகவும் சில தர்காக்களில் மயில் இறகுகள் பயன்படுத்தப்படுவதில்லையா என சில பி ஜே பி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வளர்ச்சிக்கு பின்னர் தற்போது பூ தான் மசூதியில் வனத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். தவிர அமைச்சர் லட்சுமி ஹெப்லீகர் மகனும் புலி நகத்திலான டாலரை அணிந்திருப்பதுடன் ஆனால் அது போலி என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறொரு நியாயம் என மாநில அரசு செய்யப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் பேதங்கள் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றங்சாட்டி வருகின்றன. இவை அனைத்துக்கிடையில் தற்போது சிக்கமகளூருவில் பாபா பூ தான் மலை தர்கா பொறுப்பாளர் கௌஸ் மஹதீனுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.