புலி தாக்கி விவசாயி பலி

மைசூர், அக்.3-
கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை புலி அடித்து கொன்றது. அவரது பெயர்கணேஷ் (58) என தெரியவந்துள்ளது
நாகரஹோளே தேசிய பூங்காவின் முத்தனஹள்ளி வனப்பகுதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இவர் நேற்று கால்நடைகளை மேய்க்க சென்றுள்ளார். ஆனால் மாலையில் இவர் வீடு கால்நடைகள் மட்டும் வீட்டுக்கு வந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து கணேஷ் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக தேடினர் தேடுதல் வேட்டையில் கணேஷின் சடலம் முத்தனஹள்ளி வனப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கிராம மக்களுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்
விசாரணையில், புலி தாக்கியதில் அவர் உயிரிழந்தது உறுதியானது. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கணேஷ் வசித்து வந்ததாகவும் இப்போது அவர் புலி அடித்து இறந்து விட்டதால் அவர் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்
வன விலங்குகள் தொல்லை தொடர்பாக வனத்துறை ஊழியர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. புலிகள் திட்ட இயக்குனர் ஹர்ஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சம்பவ இடத்திற்கு எம்எல்ஏ ஜி.டி. ஹரிஷ் கவுடா நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். எம்எல்ஏ 50 ஆயிரம் ரூ. இழப்பீடு வழங்கினார். வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு கால்நடைகளை அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், மக்கள் அமைதி அடையவில்லை மனிதர்களின் உயிருக்கு ஆபத்தாக விளங்கும் இதுபோன்ற விலங்குகளை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று போர் குரல் எழுப்பினர். இதே போல் குடகு மாவட்டத்திலும் தொடர்ந்து வனவிலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் யானைகள் தாக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
குடகு யானை வனப் பகுதியில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் ஊழியராகப் பணியாற்றி வந்த கிரீஷ் (35) என்பவர் சமீபத்தில் யானை தாக்கி உயிரிழந்தார். யானை கிரீஷை விரட்டிச் சென்று தாக்கியது. அதற்கு முன், அதே பகுதியில் சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை யானை தாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.